Skip to main content

வாட்டர் பாட்டில் தயாரிப்பு!


வேலை தேடி களைத்து விட்டீர்களா ....
இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்...



வாட்டர் பாட்டில் தயாரிப்பு!

கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக வந்திருப்பவைதான் பெட் பாட்டில்கள். கண்ணாடி பாட்டில்களைவிடக் கூடுதல் பாதுகாப்பும், காற்றழுத்தத்தைத் தாங்கக்கூடிய தன்மையும் கொண்டவை இந்த பெட் பாட்டில்கள். ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடலாம் அல்லது இந்தப் பாட்டில்களை மறுசுழற்சி செய்யலாம் என்பதால் பெட் பாட்டில் தயாரிக்கும் தொழிலுக்கு நிறைய வரவேற்பு!
மருந்து மற்றும் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை அடைத்து விற்பதற்கும், ஊறுகாய், பினாயில் போன்றவை அடைப்பதற்கும் ஏற்ற சின்னச் சின்னப் பாட்டில்கள் விற்பனைக்கான வாய்ப்புகளாக உள்ளன. எந்தப் பகுதியிலும் இந்தத் தொழிலை தொடங்கலாம் என்பது இதிலிருக்கும் கூடுதல் சிறப்பு.

பெட் என்பது கிரானுவல் டைப்பில் வரும். இதை இன்ஜெக்ஷன் மோல்டிங் என்கிற முறையில் பிரீஃபார்ம் (Preform)  என்கிற சிறிய பாட்டில்களாகத்  தயாரிப்பார்கள். இது சிறிய காற்று அடைக்கப்பட்ட பலூன்போல இருக்கும். இதுதான் பெட் பாட்டில் தயாரிப்பின் மூலப்பொருள்.
பெட் பாட்டில் தயாரிக்க அந்த இயந்திரங்களில் பொருத்துவதற்குத் தேவையான அளவு அச்சுக்களை இணைக்க வேண்டும். இந்த இயந்திரத்துடன் காற்று அழுத்தம் உள்ள கம்ப்ரஸர் இணைப்பு வேண்டும். இந்த பிரீஃபார்ம் பாட்டில்களை இயந்திரத்தில் பொருத்தி அழுத்தமான வெப்பக் காற்றை உட்செலுத்தினால்,  சிறிய பாட்டில் போன்ற வடிவம் விரிவடைந்து, நாம் பொருத்தி உள்ள அச்சின் வடிவம் பெற்று பாட்டில்களாக மாறும். அவற்றை வெளியே எடுத்து குளிர்வித்து, அதற்கான மூடியை இணைத்து விற்பனைக்கு அனுப்பலாம்!
பொதுவாக, பெட் பாட்டிலுக்கான பிரீஃபார்ம் விற்பனை செய்பவர்களே பெட் பாட்டில் மூடியையும் தயாரித்துத் தருவார்கள். நாம் மூடியுடனோ அல்லது மூடியில்லாமலோ விற்பனை செய்யலாம்.


திட்ட அறிக்கை! (ரூ.)

பெட் பாட்டில் தயாரிக்கும் ஓர் இயந்திரத்தை வாங்க ரூ.5 லட்சம் ஆகும். நாம் இரண்டு இயந்திரங்கள் வாங்கலாம்.  ஒரு மணி நேரத்தில் 1,200 பாட்டில்கள் வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கான கம்ப்ரஸர் இயந்திரம் ரூ.6 லட்சம் ஆகும்.
கட்டடம்: வாடகை (அ) சொந்தமாக
இரண்டு இயந்திரங்கள் : 10 லட்சம்
கம்ப்ரஸர் இயந்திரம் : 6 லட்சம்
மின்சாரம் : 1 லட்சம்
நடைமுறை மூலதனம் : 6 லட்சம்

மானியம் (ரூ.)

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் 25 -  35% வரை மானியம் பெற முடியும். அல்லது நீட்ஸ் திட்டத்தில் 25% மானியத்துடன் துவங்கலாம்.
நமது மூலதனம் : 1.15 லட்சம்
மானியம் 25% : 5.75 லட்சம்
காலக்கடன் :16.10 லட்சம்

உற்பத்தி!

ஒரு மணி நேரத்துக்கு 1,000 பாட்டில்கள் வீதம் ஒரு ஷிப்ட்-க்கு 8,000 பாட்டில்கள் வரை செய்யலாம். நாம் இரண்டு இயந்திரங்களை வைத்திருப்பதால், 16 ஆயிரம் பாட்டில்கள் உற்பத்தி செய்ய முடியும். பிரீஃபார்ம் பாட்டில்கள் 1 கிலோ ரூ.140. ஒரு பாட்டில் 19-21 கிராம் வரை வரும். நாம் ஒரு லிட்டர் அச்சில் தயாரிப்பதாக எடுத்துக்கொண்டால், ஒரு கிலோ பிரீஃபார்ம் மூலம் 50 பாட்டில்கள் கிடைக்கும்.
நமது ஒருநாள் உற்பத்தியான 16 ஆயிரம் பாட்டிலுக்கு 320 கிலோ பிரீஃபார்ம் தேவை. ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள் எனக் கணக்கிட்டால் 8 டன் மூலப்பொருள் தேவைப்படும் (320ஙீ25=8,000 கிலோ).
ஒரு டன் மூலப்பொருளின் (1,000 கிலோ) விலை ரூ.1.40 லட்சம் எனில், 8 டன்னுக்கு ரூ.11.20 லட்சம் தேவை. நடைமுறை மூலதனம் குறைவாக இருப்பவர்கள் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளலாம்.

செலவுகள்!  (ரூ.)

மூலப்பொருள்: 11.20 லட்சம்

வேலையாட்கள்:

மேலாளர்       : 1X10,000 = 10,000
பணியாளர்கள்   : 5X7000 =   35,000
உதவியாளர்கள்  : 2X5000 =  10,000
விற்பனையாளர்  : 1X8,000 =   8,000
______________

மொத்தம்          63,000

__________

மின்சாரம் 50 ஹெச்.பி     : 20,000
சாதாரணமாக ஒரு பிரீஃபார்ம் 20 கிராம் இருக்கும். ஒரு கிலோவுக்கு 50 எண்ணிக்கை என்று கொண்டால், ஒன்றின் விலை ரூ.2.80. ஒரு பாட்டில் விற்பனை விலை ரூ. 3.20.
சிறிய ஆர்டர்கள் எனில் ரூ.3.60 வரை விற்கலாம். சராசரி விலை ரூ.3.40 எனக் கொண்டால், தினசரி 16,000 பாட்டில்களும் மாதமொன்றுக்கு 4 லட்சம் பாட்டில்களும் உற்பத்தி செய்வோம். ஆர்டர்களைப் பொறுத்து உற்பத்தியை அதிகரிக்கலாம்!


மொத்த வருமானம்: 4,00,000ஙீ3.40 = 13,60,000 (அதிகமாகத் தயாரிக்கும்போது வருமானமும் அதிகரிக்கும்)

மொத்த செலவுகள்: (ரூ.)
வாடகை :       10,000
மூலப் பொருட்கள் :     11,20,000
மின்சாரம் :       20,000
தொழிலாளர்கள் :       63,000
கடன் வட்டி (12.5%) :       16,700
கடன் தவணை (72 மாதம்) :       22,300
இயந்திரப் பராமரிப்பு :       10,000
விற்பனை செலவு :       10,000
தேய்மானம் :       20,000
மேலாண்மை செலவு :       10,000
மொத்தம் :     13,02,000
மொத்த வருமானம் :     13,60,000
மொத்த செலவு :     13,02,000
லாபம் :          58,000
மூடியுடன் கேட்கும்போது மூடி விலை 25 பைசா முதல் 30 பைசா வரை கூடுதலாகச் செலவாகும்.




Comments

Popular posts from this blog

சணல் பைகள் தயாரிப்பு | Jute Bag Making In Tamilnadu

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... சணல் பைகள் தயாரிப்பு | Jute Bag Making In Tamilnadu பி ளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிய அளவில் எதிர்ப்புக் கிளப்பியிருப்பதை அடுத்து, சணல் பைகளுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. துணிப்பைகள் அளவுக்கு விலை அதிகமாக இல்லாமலும் அதே அளவுக்கு உழைக்கும் தன்மையோடும் இருப்பது சணல் பைகளின் ப்ளஸ் பாயின்ட்! இத்தனை வரவேற்பு இருக்கும்போது அந்தத் தொழிலில் இறங்கிவிடுவது நல்ல முடிவாகத்தானே இருக்கமுடியும். முதலீடு:- இதற்கு முதலீடு என்று பார்த்தால் பெரிய அளவில் ஏதுமில்லை. ஐந்தாயிரம் ரூபாய்க்கு தையல் இயந்திரமும், பத்துக்கு பத்து இடமும் இருந்தால் போதும். மற்றபடி பைகள் தயாரிப்பதற்கான நூல், கைப்பிடி போன்றவை பெரிதாக செலவு வைக்கக்கூடிய விஷயங்கள் இல்லை. மூலப்பொருல் :- இந்த சணல் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான சணல் ஷீட்கள் பல சைஸ்களில் கிடைக்கின்றன. இந்த ஷீட்கள் தயாராவது மேற்கு வங்காளத்தில்தான் என்றாலும் இதன் டீலர்கள் தமிழ்நாடு அளவில் பரவலாக இருக்கிறார்கள். ஒரு மீட்டர் ஷீட் 30 ரூபாய் முத...

ஊதுபத்தி செய்வது எப்படி?

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... ஊதுபத்தி செய்வது எப்படி தேவையானவை :- ஊதுபத்தி உற்பத்தி செய்யும் இயந்திரம் மூன்று வகைகளில் உள்ளது   :- * SINGLE PEDAL MANUAL = RS  13,000 ONLY . * DOUBLE PEDAL MODEL MANUAL =  RS 15,500 ONLY. * SEMI AUTOMATIC MODEL =  RS 65,000 ONLY. * FULLY AUTOMATIC = RS 75,000 ONLY. முதலீடு :- 1 லட்சம் போதுமானது SINGLE PHASE CURRENT   --------  வீட்டு கரண்ட் போதுமானது அகர்பத்தி உற்பத்தி செய்ய உரிய பயிற்சி முக்கியம் தேவையானது  லாபம் :- நல்ல லாபம் ஈட்டலாம்  மாதம் 30,000-/- நிகர லாபம் ஆகும்  * PRODUCTION CAPACITY OF 8000 TO 30000 STICKS PER SHIFT, * RAW AGARBATTI FROM 3MM TO 6 MM THICKNESS AND LENGTH 6 INCH TO 14 INCH * MASALA AGARBATTI CAN ALL SO BE MADE BY THIS MACHINE, * ROUND AND SQUARE (POLISHED EVEN STICK LESS THAN 2MM DIA )STICKS CAN BE USED * HARDENED STRUCTURE WITH SS ROCKET AND NOZZLE.. வேலையாட்கள் :- சிங்...

சுயதொழில் – மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்ப‍டி?

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... சுயதொழில் –  மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்ப‍டி? வேண்டியபொருட்கள்:- 1.வேக்ஸ்(wax) 2.க்ரையான்ஸ் 3.தேங்காய்  4.எண்ணெய் 5.திரிநூல் 6.ப்ளாஸ்டிக்  7.மோல்டிங்  எசன்ஸ் – ஜாஸ்மின், தாழம்பூ இதில், வேலைப்பளு குறைவு. குறைந்த முதலீடு, இட வசதி போதுமானது. ஒருவர் மட்டும் உழைத்தாலே போதும். வீட்டிலேயே இதை நல்ல முறையில் நடத்த முடியும். தினமும் குறைந்தது 5 கிலோ, அதிகபட்சம் 25 கிலோ மெழுகுவர்த்தி தயாரிக்க முடியும். இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது. ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும். பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பி...