Skip to main content

Posts

கொசு விரட்டி தயாரிப்பு

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... கொசு விரட்டி தயாரிப்பு கொசு விரட்டி தயாரிப்பு தொழில்  தற்போதைய வாழ்க்கை முறையில் ரசாயனங்களின் பங்கு மகத்தானது என்றாலும், இயற்கை பொருட்களுக்கு இருக்கும் மவுசு தனிதான். கொசுக்களை விரட்ட, நாங்கள் தயாரிக்கும் மூலிகை லிக்யுட், நுகர்வோரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொசு விரட்டி தயாரிக்கும் தொழிலை கற்றுக்கொண்டால், நல்ல லாபம் சம்பாதிக்கலாம்’ என்கிறார் கோவை குனியமுத்தூரில் பெஸ்ட் நேச்சுரல் அண்ட் கம்பெனி நடத்திவரும் ஜெயந்தி. அவர் கூறியதாவது: விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண் ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதன் வாசனை கொசு, பூச்சிகளை அண்ட விடாது. சாம்பிராணி, காய்ந்த வேப்பிலை புகை மூட்டம் போன்றவையும் கொசுகளை விரட்டும். இதை அடிப்படையாக வைத்து, கடந்த 5 ஆண்டாக கொசு விரட்டி மூலிகை லிக்விட் தயாரித்து விற்கிறோம். இது பாரம்பரியமும், நவீனமும் கலந்தது. மின்சார விளக்கில் பொருத்தி பயன்படுத்தலாம். ஆஸ்துமா உள்ளிட்ட நோயாளிகளை கொசுவிரட்டி பாதிக்கக் கூடாத...
Recent posts

பங்குச் சந்தை என்றால் என்ன?/Share Market News Basics In Tamil

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... பங்குச் சந்தை என்றால் என்ன?/Share Market News Basics In Tamil ‘மாப்பிள்ளைக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. பீடி, சிகரெட் பிடிக்க மாட்டார்... வெற்றிலை, பீடா பழக்கம் கிடையாது... சீட்டுக் கட்டை கையால்கூடத் தொடமாட்டார். இவ்வளவு ஏன், பங்குச் சந்தையில்கூட பணம் போடலைன்னா பார்த்துக்கோங்களேன்!’ இப்படிப்பட்ட பட்டியலில்தான் இருக்கிறது நம் பங்குச் சந்தை... இன்னமும் பலர் பங்குச் சந்தையிலிருந்து ஒதுங்கியிருக்கிறார்கள். நீங்களும் அப்படியிருந்தால் இனியாவது மறுங்கள். கவனமாகக் கையாண்டால் நிச்சயமாக அது லாபத்தை அள்ளிக் கொடுக்கும் நல்ல வழிதான். உடனடியாக இல்லாவிட்டாலும் நீண்ட காலத்தில் பங்குச் சந்தை பற்றிய உங்கள் கருத்தை நிச்சயமாக மாற்றிக்கொள்வீர்கள். கம்பெனி நாலு விதம்..! கம்பெனி... கம்பெனினு சொல்றோமே அதிலே நாலுவிதம் இருக்கு. முதல்ல தனி ஆள் சொந்தமாக நடத்துற கம்பெனி. அடுத்து ரெண்டு மூணுபேர் சேர்ந்து நடத்துற பார்ட்னர்ஷிப் கம்பெனி... அடுத்து, கொஞ்ச பேர் கூட்டாச் சேர்ந்து பணம் போட்டு நடத்துற பிரைவேட் லிமிடெட்...

சணல் பைகள் தயாரிப்பு | Jute Bag Making In Tamilnadu

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... சணல் பைகள் தயாரிப்பு | Jute Bag Making In Tamilnadu பி ளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிய அளவில் எதிர்ப்புக் கிளப்பியிருப்பதை அடுத்து, சணல் பைகளுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. துணிப்பைகள் அளவுக்கு விலை அதிகமாக இல்லாமலும் அதே அளவுக்கு உழைக்கும் தன்மையோடும் இருப்பது சணல் பைகளின் ப்ளஸ் பாயின்ட்! இத்தனை வரவேற்பு இருக்கும்போது அந்தத் தொழிலில் இறங்கிவிடுவது நல்ல முடிவாகத்தானே இருக்கமுடியும். முதலீடு:- இதற்கு முதலீடு என்று பார்த்தால் பெரிய அளவில் ஏதுமில்லை. ஐந்தாயிரம் ரூபாய்க்கு தையல் இயந்திரமும், பத்துக்கு பத்து இடமும் இருந்தால் போதும். மற்றபடி பைகள் தயாரிப்பதற்கான நூல், கைப்பிடி போன்றவை பெரிதாக செலவு வைக்கக்கூடிய விஷயங்கள் இல்லை. மூலப்பொருல் :- இந்த சணல் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான சணல் ஷீட்கள் பல சைஸ்களில் கிடைக்கின்றன. இந்த ஷீட்கள் தயாராவது மேற்கு வங்காளத்தில்தான் என்றாலும் இதன் டீலர்கள் தமிழ்நாடு அளவில் பரவலாக இருக்கிறார்கள். ஒரு மீட்டர் ஷீட் 30 ரூபாய் முத...

வாட்டர் பாட்டில் தயாரிப்பு!

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... வாட்டர் பாட்டில் தயாரிப்பு! கண்ணாடி பாட்டில்களுக்கு மாற்றாக வந்திருப்பவைதான் பெட் பாட்டில்கள். கண்ணாடி பாட்டில்களைவிடக் கூடுதல் பாதுகாப்பும், காற்றழுத்தத்தைத் தாங்கக்கூடிய தன்மையும் கொண்டவை இந்த பெட் பாட்டில்கள். ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிடலாம் அல்லது இந்தப் பாட்டில்களை மறுசுழற்சி செய்யலாம் என்பதால் பெட் பாட்டில் தயாரிக்கும் தொழிலுக்கு நிறைய வரவேற்பு! மருந்து மற்றும் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போன்றவை அடைத்து விற்பதற்கும், ஊறுகாய், பினாயில் போன்றவை அடைப்பதற்கும் ஏற்ற சின்னச் சின்னப் பாட்டில்கள் விற்பனைக்கான வாய்ப்புகளாக உள்ளன. எந்தப் பகுதியிலும் இந்தத் தொழிலை தொடங்கலாம் என்பது இதிலிருக்கும் கூடுதல் சிறப்பு. பெட் என்பது கிரானுவல் டைப்பில் வரும். இதை இன்ஜெக்ஷன் மோல்டிங் என்கிற முறையில் பிரீஃபார்ம் (Preform)  என்கிற சிறிய பாட்டில்களாகத்  தயாரிப்பார்கள். இது சிறிய காற்று அடைக்கப்பட்ட பலூன்போல இருக்கும். இதுதான் பெட் பாட்டில் தயாரிப்பின் மூலப்பொருள். பெட் பாட்டில...

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு | Theangaai Naar Kayiru Thayaarippu

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... தேங்காய் நார் கயிறு தயாரிப்பு | Theangaai Naar Kayiru Thayaarippu:- ''நான் அம்பானி ஆகணும், நான் அம்பானி ஆகணும்!'' - அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடிகர் கருணாஸ் ஒற்றைக் காலில் நின்று கொண்டு சொல்லும் வசனம் இது. அதுபோல நானும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்கிற கனவு கண்டு வருகிறவர்கள் பலர். உங்கள் கனவை நிஜமாக்க இதோ வந்துவிட்டது சூப்பர் பிஸினஸ் ஐடியாக்கள். ஒரு தொழிலைத் தொடங்க முதலீடு முதல் மூலப்பொருள் வரை, உற்பத்தி முதல் விநியோகம் வரை, கடன் முதல் ரிஸ்க் வரை அனைத்து விஷயங்களையும் அலசி ஆராய்ந்து தரவே இந்த பகுதி. வாரம் ஒரு தொழில் வீதம் இதில் சொல்லப்படும் பல்வேறு தொழில்களைப் படித்து, உங்களுக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து, பயனடைந்து வருங்கால அம்பானிகளாக வாழ்த்துகள். இந்த வாரம், உங்களுக் காக தேங்காய் நாரிலிருந்து கயிறு தயார் செய்யும் பிஸினஸ்! இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்த...

பிஸ்கட்- தயாரிப்பு எப்படி ?

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... பிஸ்கட் செய்வது எப்படி - தயாரிப்பு :- நொறுக்குத் தீனி வகைகளில் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது. தவிர, சில மாதங்கள்வரை வைத்திருந்து விற்றாலும் பொருள் கெடாது என்பது இதிலுள்ள இன்னொரு பெரிய பிளஸ் பாயின்ட். விதவிதமான சுவையோடு, தரமாகவும் பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு நம்மூர் பேக்கரிகள் நல்ல உதாரணம். அதுவே புதிய தொழில்நுட்பங்களோடு இறங்கும்போது பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு இத்தொழிலில் சாதிக்க வும் நிறையவே வாய்ப்புள்ளன. சந்தை வாய்ப்பு! பெருநகரம், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்கள் என சந்தை வாய்ப்புகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் சந்தையை பிராண்டட் தயாரிப்புகள் ...

பேப்பர் கவரில் தொழில்/How To Make paper Cover/சுய தொழில்

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... பேப்பர் கவரில் தொழில்:- சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காரணமாக பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பேப்பர் கவர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் பேப் பேக்ஸ் எனும் நிறுவனம் நடத்தி வரும் தனராஜ். அவர் கூறியதாவது: பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன். பொள்ளாச்சி அடுத்த கேரள பகுதிகளில், பாலிதீன் கவர்களுக்கு பதில், பேப்பர் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையால், பேப்பர் கவர் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. என் அப்பா பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை துவங்கினார். அதன் பிறகு நானும் பேப்பர் கவர் தயாரிக்க துவங்கினேன். பொள்ளாச்சியில் இது போல 13 நிறுவனங்கள் உள்ளன.  கோவையில்கூ...